ரமளான் வந்து விட்டது!
- திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com Mob .974 + 66928662 பாவங்களே வாழ்க்கையாகி விட்ட மனித சமூகம் தம்மை பரிசுத்தப் படுத்திக் கொள்ள காலம் நெருங்கி விட்டது. இந்நிரந்தரமற்ற இவ்வுலகிலிருந்து விடைபெற்று செல்லும் நாம் மறுவுலகில் சுவனத்திற்கு நம்மை முன்பதிவு செய்யும் தருணம் வந்து விட்டது. பூமிப் பந்து முழுவதும் இன்னும் சில நாட்களுக்குள் ரமளானுக்குள் நுழைய இருக்கிறது. இவ்வுலகிற்கே நேர்வழிக் கிடைத்த மாதம் வரப் போகிறது இதோ! இவ்வுலகம் மாறப் போகிறது. ரமளான் மாதம் பற்றியும் அதில் நோன்பு நோற்க வேண்டியது பற்றியும் இதோ குர்ஆன் கூறுகிறது ரமளான் மாதம் எத்தகையதென்றால் , அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் , மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும் , சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ , அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ , பயணத்திலோ இருந்தால் , அவர் மற்ற நாட்களில் கணக்கிட...