இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாமியான் புத்த சிலைகளும் பர்மாவின் பவுத்த தீவிரவாத படுகொலைகளும்!

- திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com Mob  .974 + 66928662 “பர்மாவில் முஸ்லிம் தீவிரவாதிகளால் பவுத்தர்கள் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான பவுத்தர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் வீடுகளை விட்டு விரட்டப் பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும் ஈவிரக்கமின்றி கொத்து கொத்தாக படுகொலை செய்யப் பட்டார்கள்.பலர் நாட்டை விட்டு விரட்டப் பட்டு  உயிர்ப் பிழைக்க படகுகளில் ஏறி அடைக்கலத்திற்கு அண்டை நாடுகளுக்கு சென்றால் எந்த நாடும் ஏற்றுக் ஏற்றுக் கொள்வதில்லை.அதனால் கடலிலேயே உணவின்றி நீரின்றி இறந்தவர்கள் ஏராளம்.” இப்படி ஒரு செய்தி வந்திருந்தால் இந்நேரம் ஊடகங்கள் நிமிடத்திற்கு ஒரு முறை அதை ஒளி பரப்பி இருக்கும்.பத்திரிக்கைகள் முதல் பத்திரிக்கையில் கலர்ப் படம் போட்டு கண்டனம் தெரிவித்து இருக்கும்.முஸ்லிம் தலைவர்கள் ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறார்கள் என்று சிலர் கொதித்திருப்பர். முஸ்லிம்கள் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று சிலர் விமர்சனம் செய்திருப்பர். இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மேற்கு நாடுகள் அறிக்கை வெளியிட்டு இருக்கும்...