இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தவறை ஒப்புக் கொள்வது தலை குணிவல்ல!

திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com Mob  .974 + 66928662 சுய மரியாதை என்ற பெயரில் வரம்பு மீறிய செயல்பாடுகள், சமூகத்தில் மிகவும் சிறந்த நபராக தம்மை தாமே கருதிக் கொள்ளல் ஆகியவற்றின் மூலம் மற்ற மனிதர்களுக்கு அநீதி இழைத்தல்,அவ மரியாதை செய்தல், அவதூறு கூறுதல்,தவறு இழைத்தல்,அல்லது தவறான கருத்தை சொல்லுதல் ஆகியவற்றை சிலர் செய்கின்றனர். இதில் குறிப்பிட பட வேண்டிய  விஷயம் என்னவென்றால் இச்செயல் பாடுகள் எதுவும் நீதி மற்றும் நெறிகளுக்கு முரணானது என்று தெரிந்தப் பின்னரும் வருத்தப் படவோ அதை திருத்திக் கொள்ளவோ அவர்கள் முன் வருவதில்லை. இதில் பெரியோர்கள் ,பிரமுகர்கள்,தலைவர்கள் ,அதிகாரிகள் ஆகியோர்தான் குறிப்பிடத்தக்கவர்கள். அருள்மறை குர்ஆனில் அல்லாஹுத் தஆலா கூறுகிறான் “பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ( 2:37 ) இறைத்தூதர் முஹம்மது ...

எழுங்கள்! போராடுங்கள்! முயலுங்கள்!

- திருச்சி A. முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com Mob  .974 + 66928662 வாழ்க்கை என்பது கவிதைகளில் வசந்தக் காலமாக வர்ணிக்கப் படுகிறது. திரைகளில் பூத்துக் குலுங்கும் தோட்டமாக காட்டப்படுகிறது.கற்பனை உலகிலோ எப்பொழுதும் இருள் கவ்வாத ஒளிமயமிக்க பவுர்ணமி இரவுகளாகவே காட்டப் படுகிறது. சுகமான வாழ்க்கையின் எதிர்ப் பக்கத்தையும் மனிதன் நோக்கித்தான் ஆக வேண்டும். வசந்த் காலத்தை மட்டுமல்ல சுட்டெரிக்கும் கோடை காலத்தையும் அவன் கடந்துதான் ஆக வேண்டும்.தோட்டங்களில் மட்டுமல்ல கால்களின் பாதங்களை கிழிக்கும் கரடு முரடான கற்கள் மற்றும் முட்கள் மீதும் அவன் நடந்தே ஆக வேண்டும். ஒளி வெள்ளத்தில் எந்த சிரமமும் இன்றி போவது மட்டுமல்ல பாதையின் அடுத்தப் பகுதியில் இருள் சூழ்ந்த பள்ளத்திலும் அவன் போய்த்தான் தீர வேண்டும்.அப்போதுதான் வாழ்வின் இலக்கை மனிதன் அடைய முடியும். அல்லாஹ்வின் மீது  முழுமையான நம்பிக்கை, தன்னம்பிக்கை, விடா முயற்சி, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியன மனிதனின் வாழ்வை வளப் படுத்தும்.அவனின் எதிர் காலத்தை பலப் படுத்தும். அருள் மறை குர்ஆன் அழகுபட உரைக்கிறது “ நீங்கள் (உண...