இஸ்லாமியர்கள் கால்நடைகளை வேதனை தரும் முறையில் அறுப்பது ஏன்?
கேள்வி இஸ்லாமியர்கள் கால்நடைகளை – இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே! இது சரியா? பதில்: ‘ஸபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் – மேற்படி பொருள் குறித்து – ஒரு சீக்கியருக்கும் – ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி விடுறேன். சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார்: நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது – அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு – கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் – நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து – சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்? மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று. மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் – ‘ஷாபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை...