விஞ்ஞானி ஹெர்ஷலின் தவறை சுட்டிக் காட்டிய குர்ஆன்!
வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி விண்வெளியை ஆராய்ந்து பல உண்மைகளை கண்டு பிடித்தார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இவருக்கு முன்னால் 1609 ல் விஞ்ஞானி கலீலியோ பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் அந்த அளவு விண்வெளித்துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் அந்த காலத்தில் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாததே காரணம். நமது பால்வழி மண்டலம் வெறும் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த விசாலமான பெருவெளி என்ற வரையில்தான் கலீலியோவால் கண்டு பிடிக்க முடிந்தது. அதற்கு மேல் முனனேற முடியவில்லை. விஞ்ஞானி ஹெர்ஷல் 1783 வாக்கில் தொலைநோக்கியில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி குறிப்பிடப்படும்படியான பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஒருநாள் அவர் ஆகாயத்தின் வட திசைக் கோளத்தில் தமது ஆய்வை மேற்கொண்டிருந்த போது அவரது பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது. ' அதோ ஆகாயத்தில் ஒரு ஓட்டை. வெளி உலகிற்கு ஒரு ஜன்னல் ' எனக் கூக்குரலிட்டார். அடக்க முடியாத ஆச்சரியத்தால் தனது சகோதரியை அழைத்து வந்து தான் கண்ட காட்சியை அவருக்கும் காட்டினார். இதே போல் இவரது மகன் ஜான் என்...